வாழ்வை வளமாக்கி கேட்டதை தரும் வாராஹி அம்மன் வழிபாடு

மகாலட்சுமியின் அம்சம் ஆகிய வாராகி அம்மனின் அருளை பற்றி இந்த பதிவில் காண்போம்.


AMMAN WORSHIP

சாந்தமான மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகிய வாராகி அம்மனை வழிபடுவதனால் நம் வாழ்வில் தீய சக்திகளை அண்டாமல் நம் வாழ்வில் உயர வழிவகுக்கும். இவர்களுக்கு மிகவும் பிடித்த பூவாகிய சங்குப்பூ, பன்னீர் ரோஜா, மற்றும் செம்பருத்தி கொண்டு இவர்களுக்கு அர்ச்சனை செய்யலாம். வாராய அம்மனின் சிலையையும் படத்தையும் வீட்டில் வைக்கலாமா என்ற என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. கண்டிப்பாக வராகி அம்மனின் சிலையையோ, படத்தையோ வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். வாழ்க்கையே முடிந்து விட்டது இதற்கு மேல் எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள் தாராளமாக வாராகி அம்மனின் வழி பாட்டை செய்யலாம். நீங்களே எதிர்பாராத அளவுக்கு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டிப்பாக வரும். வீட்டில் ஒற்றுமையின்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை, கடன்  பிரச்சனைகளிலிருந்து விடுபட வாராஹி அம்மனை பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்து பன்னீரில் அபிஷேகம் செய்து வழிபடுவதனால் நமக்கு  நிச்சயமான மாற்றம் கிடைக்கும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று இவர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு சிறப்பு பெறுவோம்.