முருகர் நடக்கிற மாதிரி இருக்கிற சிலை கோவில் ஈரோட்டில் இருக்கா ?

என்னங்க சொல்றீங்க, முருகர் நடக்கிற மாதிரி இருக்கிற சிலை கோவில் ஈரோட்டில் இருக்கா அட ஆமாங்க ஈரோட்டில் இருந்து கரூர் போற வழியில காங்கேயம் பாளையம் அப்படிங்கற ஊரில் எழுந்தருளியுள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலை பற்றி தாங்க பாக்க போறோம்.


Lord Murugan walking

என்னங்க சொல்றீங்க, முருகர் நடக்கிற மாதிரி இருக்கிற சிலை கோவில் ஈரோட்டில் இருக்கா அட ஆமாங்க ஈரோட்டில் இருந்து கரூர் போற வழியில காங்கேயம் பாளையம் அப்படிங்கற ஊரில் எழுந்தருளியுள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலை பற்றி தாங்க பாக்க போறோம். இந்த பெயர் காரணம் அப்படின்னு பார்த்தீங்கன்னா நடு காவிரி ஆற்றில் அமைந்துள்ள ஈஸ்வரனை குறிப்பதால் நடு+ ஆற்று+ ஈஸ்வரர் = நட்டாற்றீஸ்வரர் என்ற பெயர் வந்துள்ளது. 600 வருடங்கள் பழமையான கோவில் மற்றும் 3000 வருடம் பழமையான அத்திமரம் இங்கு இருக்கு. இது ஒரு தீவு மாதிரி அமைந்திருக்கும் இந்த திருக்கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவிலும் இடம்பெற்றிருக்கு. அகத்திய முனிவரின் பாதம் பெற்ற இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய மூலக்கடவுளான சிவபெருமான் அகத்தியரால் மணலால் செய்யப்பட்டு லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.சிவபெருமான் சன்னதி மேல் தளத்தில் அமைந்துள்ளது மேலும் நல்லநாயகி அம்மாள் சன்னதி கீழ் தளத்திலும் அமைந்துள்ளது. திருமண கோலத்தில் காட்சி அளிக்கின்ற இந்த கடவுளுக்கு உகந்த நாளாக ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் கருதப்படுகிறது. மேலும் இங்கே விநாயகர் மற்றும் முருகன் சன்னதியும் இடம் பெற்று இருக்கு.முருகன் இங்கு அகத்தியரை வரவேற்பதற்காக முன் நின்ற தால் நடப்பது போன்ற சிலை உருவம் பெற்று இருக்கிறார். இந்தக் கோவிலில் விநாயகரையும் சிவபெருமானையும் வழிபடும்போது ஓ என்று எழுத்தாலும் நல்லநாயகி அம்மாள் மற்றும் முருகரை வழிபடும்போது  ம் என்ற எழுத்தாலும் ஓம்கார வடிவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர் நடன கணபதியாக காட்சி அளிக்கிறார்.குடகு மலையிலிருந்து பூம்புகார் வரையும் உள்ள காவிரி ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள இத்தகைய நட்டாற்றீஸ்வரர் கோவிலின் சிறப்பை மாந்திரீக காவியம் என்ற நூல் சிறப்பித்துள்ளது.