வெற்றியை தரும் ஏழு குதிரை படம் செய்யும் அதிசயங்கள்
ஏழு குதிரை படம் ஓடுவது போல் இருக்கும் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதை செய்யும் நன்மைகளை குறித்து இனி பார்ப்போம்.
ஒரு சிலர் வீடு கட்டும் போது வாஸ்து முறைகளை சரியாக கவனிக்காமல் கட்டிவிடுவார்கள் அவ்வாறு வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் இந்த குதிரை ஏழு குதிரைகள் ஓடுவது வாரு உள்ள படங்களை மாற்றுவதனால் அந்த வாஸ்து குறைபாடுகள் நிவர்த்தி ஆகி வீடு வளம் பெறும். இந்த குதிரை படங்களை சுவற்றில் மாட்டுவதற்கு உகந்த இடம் வீட்டின் வரவேற்பு அறை என்று சொல்கின்ற ஹாலில் உள்ள ஜன்னல்களை பார்த்தவாறு ஏழு வெள்ளை நிற குதிரைகள் ஓடுவது போல உள்ள படங்களை மாட்டுவதனால் வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் நீங்கி வீடு வளம் பெறும். ஒரு சிலர் குதிரை படங்களை நிற்பது போல வாங்கி விடுவார்கள் அவ்வாறு இல்லாமல் ஓடுவது போல குதிரைகள் இருக்க வேண்டும் அவசியமாக வெள்ளை குதிரையாக மட்டுமே அது இருக்க வேண்டும். இவ்வாறு செய்து வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை நீக்கி வளம் பெறுவோம்.