தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

நிறைய இடங்களில் நீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எதற்காக என்று தெரியாமல் இருந்திருக்கும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


BENEFITS OF LEMON

 தொழில் செய்யும் இடங்களில் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டு வைத்திருப்பார்கள். இது ஒரு பிரசன்ன முறையை குறிக்கிறது அதாவது ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் கோவிலில் சென்று பூ போட்டு அங்குள்ள சிறு குழந்தைகளிடம் எடுக்கச் சொல்வார்கள் இது போன்ற முறை தான் இந்த தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைப்பதும். அன்றைய தொழில் எப்படி இருக்கும் என்று ஒரு பிரசன்ன முறைப்படி பார்ப்பது தான் நீரில் எலுமிச்சை முழுதாக மிதந்தது என்றால் அன்று தொழில் வளமாக இருக்கும் என்று அர்த்தம். அதுவே நேரில் மூழ்கி கீழே இருந்தது என்றால் அந்த நாள் சுமாராகவே இருக்கும் என்ற  நம்பிக்கை உள்ளது. அது மட்டுமல்லாமல் இது ஒரு கண் திருஷ்டி போக்கும் ஒரு முறையாக இருப்பதினால் இதை கடைகளிலும் வீட்டு நிலை வாசலிலும்  வைப்பார்கள். நமது முன்னோர்கள் கையாண்ட பல பிரசன்ன முறைகளில் இதுவும் ஒன்று. இன்று வழக்கத்திலும் உள்ள ஒரு பிரசன்ன முறை. நீங்களும் தொழில் செய்யும் இடங்களில் இவ்வாறு பின்பற்றி நன்மைகளை பெற்றுக் கொள்ளவும்.