பூஜை அறையில் தண்ணீர் வைப்பவர்கள் அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்
பூஜை அறை என்பது நம் மனதினுடைய ஒழுக்கம். ஒவ்வொறு வீட்டிலும் பூஜை அறை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். வீடு என்பது எப்படி இருக்க வேண்டும் ஒவ்வொரு வீடும் நமக்கு மன சாந்தி கொடுக்க வேண்டியதாக இருக்க வேண்டும்.
பூஜை அறை என்பது நம் மனதினுடைய ஒழுக்கம். ஒவ்வொறு வீட்டிலும் பூஜை அறை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். வீடு என்பது எப்படி இருக்க வேண்டும் ஒவ்வொரு வீடும் நமக்கு மன சாந்தி கொடுக்க வேண்டியதாக இருக்க வேண்டும். மன சாந்தியை கொடுக்கும் முறை அமைப்புதான் பூஜையறை. நம் முன்னோர்கள் பூஜை அறைக்கென தனி குறிப்புகளை கொடுத்துள்ளனர். ஈசானி மூலையில் பூஜை அறை அமைந்து நாம் கிழக்கு நோக்கி சாமி படங்களை பார்த்து தரிசிக்க நம் வீட்டில் வளமும் செல்வமும் பெருகும். மனதை ஓய்வு படுத்தவும், தெளிவுபடுத்தவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு அருமையான வைத்தியம்தான் பூஜை அறை. சூரியன் அஸ்தமிக்கும்போதும்,சூரியன் மறையும் போதும் நம்ம பூஜை அறையில பூஜை பண்ணனும் இதுதான் அடிப்படையான உண்மை. பூஜை அறையில் நம் முன்னோர்களின் படம் வைக்கக்கூடாது. பூஜை செய்யும் போது மணி அடித்து சாமி கும்பிட வேண்டும் அவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள துர் தேவதைகள் ஓடும். பொதுவாக அமங்கல ஒலியின் மூலமாக தான் துர் தேவதைகள் வீட்டிற்குள் வரும் மங்கள ஒலி எழுப்பினால் அந்த துர்தேவதைகள் வீட்டை விட்டு ஓடும். பொதுவாக பூஜை அறையில் இரும்பு சாமான்களை பயன்படுத்தக் கூடாது எடுத்துக்காட்டாக அருவாள் அவற்றை பயன்படுத்துவதால் இறை சக்தி குறையும் வாய்ப்புள்ளது. பூஜை அறையில் தண்ணீர் வைப்பது மிக மிக அவசியம் இறைவன் குடிப்பார் குடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி த ண்ணீர் வைப்பதினால் அங்கு உள்ள எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து நேர்மறையாற்றலை அதிகரிக்கும்.பூஜை அறையிலும் அல்லது வீட்டில் அனைவரும் கூடும் இடத்திலும் நீர் வைப்பது மிகவும் அவசியம் அது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடும்.