அட என்னங்க சொல்றீங்க ஒன்பது வாரம் இத செஞ்சா கடன் பிரச்சனை நீங்குமா? சொந்த வீடும் வாங்கலாமா?

அட என்னங்க சொல்றீங்க ஒன்பது வாரம் இத செஞ்சா கடன் பிரச்சனை நீங்குமா? சொந்த வீடும் வாங்கலாமா?


vastu shastra

அட ஆமாங்க ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை தமிழ் கடவுளான முருகன் வழிபாடு செய்தால் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு சொந்த வீடு வாங்கலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு மிகவும் உரிய நாளாக புராணங்களில் சொல்லப்படுகிறது.நிலத்துக்குரிய அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு உரிய தெய்வமாக நாம் வழிபடுவது முருகப்பெருமானை தான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் தொடர்ந்து வழிபடும்போது நமக்கு சொந்த நிலம் அல்லது வீடு அமைய வாய்ப்புள்ளது.சஷ்டி,கிருத்திகை அல்லது அதன் திதி வரும் நாட்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு உரிய நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமை அன்று சஷ்டி, கிருத்திகை அல்லது சஷ்டி திதி போன்றவை வந்தால் மிகச் சிறப்பு. செவ்வாய்க்கு உரிய தானியமாகக் கருதப்படுவது துவரம் பருப்பு. ஆடம்பர கடவுள் என்று அழைக்கப்படுபவர் சுக்கிரன்.ஆடம்பரத்தின் கடவுளான சுக்கிரனுக்கு உரிய தானியமாகக் கருதப்படுவது அவரை. சுக்கிர பகவான் வீட்டின் ஆடம்பரத்தை மேம்படுத்தும் கடவுளாக வலம் வருகிறார். சுக்கிர திசையின் போது கேட்காமலேயே அனைத்து பொருட்களும் கிடைக்கும் யோகம் ஏற்படும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் சேரும்.கடன் பிரச்சனைகள் இருந்து விடுபட  மற்றும் சொந்த நிலம் அல்லது வீடு வாங்க வீட்டில் உள்ள பெண்கள் தலைக்கு குளித்து பிரம்ம முகூர்த்தத்தில் ஒன்பது செவ்வாய்க்கிழமையும் ஒரு மண் அகல் விளக்கு வைத்து நெய் தீப வழிபாடு செய்து அதன்பின் விரதம் இருந்து துவரம் பருப்பு அவரை இவை இரண்டையும் சேர்த்து சமைத்து இலை போட்டு முருகனுக்கு படையல் இட்டு பின் அதை அவர்கள் உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.இப்படி தொடர்ந்து ஒன்பது வாரம் செய்வதினால் கடன் பிரச்சினை தீரும் அதுமட்டுமின்றி ஆடம்பரத்தின் கடவுள் ஆன சுக்கிரனுக்கு உரிய அவரைக்காய் வீட்டில் சமைப்பதனால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கி சுப நிகழ்வுகள் நிகழும். மேலும் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் நீங்கி நேர்மறை எண்ணங்களாக உருவெடுக்கும்.எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யும் போது அதற்கு முறையான தீர்வு கிடைக்கும். தீட்டு காலத்தின் போது பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது அதற்கு பதிலாக அடுத்த வாரத்திலிருந்து அதை தொடரலாம்.