மேஷ ராசியில் சனிப் பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்க போகிறது !!!

நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவான் 29.03 2025 அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் இந்த சனி ஆனது இரண்டரை வருடங்கள் அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சஞ்சரிக்கும்.இந்த சனிப்பெயர்ச்சி தொகுப்பில் மேஷ ராசிக்கு உரிய நன்மை தீமைகளை பார்க்கலாம்.


transit affect Aries

நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவான் 29.03 2025 அன்று  கும்ப ராசியிலிருந்து  மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் இந்த சனி ஆனது இரண்டரை வருடங்கள் அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சஞ்சரிக்கும்.இந்த சனிப்பெயர்ச்சி தொகுப்பில் மேஷ ராசிக்கு உரிய நன்மை தீமைகளை பார்க்கலாம். மீன ராசியில் சனி பெயர்ச்சி நடைபெற்றாலும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் பொருந்தும். மேஷ ராசிக்கு ஏழரை சனி மற்றும் விரைய சனியின் தொடக்கமாக இந்த சனி பெயர்ச்சி அமைகிறது. இது நன்மையை காட்டிலும் தீமையை விளைவிக்கும் சனி பெயர்ச்சியாக மேஷ ராசிக்கு அமைகிறது.இது குரு சனி புதன் ஆகிய நட்சத்திரங்களில் வருகிறது. இதில் குருவின் ஸ்தானமான பாக்கியஸ்தானத்திற்கும் சனியின் ஸ்தானமான தொழில் ஸ்தானத்திற்கும் புதனின் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கும் ஆறாம் இடமான நோய் ஸ்தானத்திற்கும் இடையில் நடைபெறுகிறது. ஆகவே மேஷ ராசி நேயர்கள் மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு காரியத்திலும் செயல்பட வேண்டும். மேஷ ராசி அன்பர்களுக்கு ஒரு பெரிய விரயத்தை ஏற்படுத்தக் கூடிய சனிப்பெயர்ச்சியாக உள்ளது. வார்த்தை வாக்கு ஆகிய விஷயங்களை மிகவும் கூர்மையாக செயல்பட வேண்டும். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது ஆகவே சரியான உணவு பழக்கவழக்கங்களை கையாள வேண்டும். இது மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு குழப்பமான மன நிலையை ஏற்படுத்தக் கூடிய காலகட்டமாக அமையும். கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செவ்வாய் மாறுவதால் ஜூன் மாதத்திற்கு மேல் மேஷ ராசிக்கு செவ்வாயின் பார்வையின் காரணமாக வாய்ப்புகள் கைகூடும்.