மீன ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்குது:
ஜாதகத்துல ராகு கேது மட்டும் இல்லனா யாருக்குமே கர்மாக்கான வேலையே இல்லாம போயிரும். கர்மகாரன் என்னதான் சனி பகவானாக இருந்தாலும் தண்டனைகளையும் நன்மைகளையும் பிரித்து கொடுக்கிறது ராகு கேது பகவான் தான். அப்படிப்பட்ட ராகு கேது பெயர்ச்சி 18.5.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05மணி 08நிமிடத்தில் சரியாக ராகு காலத்தில் நடக்க இருக்கிறது. இந்த பெயற்சி மீன ராசிக்கு எப்படி இருக்க போகுது..

கால சக்கரத்தில் பன்னிரண்டாவது ராசியான மீன ராசிக்கு ஜென்ம சனியும் வரப்போகிறது அதனால் உடல்நிலை அக்கறை காட்டுவது மிகவும் அவசியம் பெரியவர்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் உடல் நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தாயின் உடல் நிலையும் சரி இல்லாமல் போக வாய்ப்புள்ளது 12ல் ராகு வருவதால் மருத்துவ செலவு கூடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மிகவும் கஷ்டமான காலமாகத்தான் இருக்கும். குழப்பமான மனநிலையே நிகழும். இருந்தாலும் கூட 6ல் கேது வருவதனால் கடன்களை அடைக்க வழிகாட்டும். என்னதான் ஜென்ம சனி நிகழ்ந்தாலும் 12 இல் ராகு இருந்தாலும் 6 ல் இருக்கும் கேது உங்களுக்கு மிகுந்த நன்மையை அள்ளிக் கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது ஏற்ற காலமாக அமையவில்லை. சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம். மேல லக்னத்தில் உள்ள குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் பள்ளிக்கு சென்று வரும் போது கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் பெயரைக் கெடுக்கும் நேரம் இது அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகு கேது பெயர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் குறைய நீங்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமேஸ்வரம் சிவனை வழிபடுவதால் உங்களுக்கு ஜென்ம சனியிலிருந்தும் ராகு கேதுவிலிருந்தும் உண்டாகும் தீமைகளில் இருந்து பாதிப்பு குறையும்.