Home / Astro / VasthuSelva
VasthuSelva
Astrology , Vasthu
பரம்பரையாக முருகப்பெருமானை வழிபட்டு வரும் குடும்பத்தில் பிறந்தவர்.முப்பாட்டியார் முருகனின் அருள்வாக்கு சொன்னவர்.தந்தையின் வழியில் முருகனுக்கு வருடம்தோறும் காவடி எடுத்து வழிபாடு செய்து வருவபர். ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் பிருகு நந்தி நாடி, டாரட் ஆருடம்,போன்ற ஜோதிட முறைகளை படித்தவர். ஜோதிட ஞானி நெல்லை K வசந்தன் அவர்களின் ஜோதிட முறையான NKV SYSTEM த்தை NKV ஐயா அவர்களிடம் நேரடியாக படித்தவர். NKV ஐயா அவர்கள் வாஸ்துவில் உனக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என்று கூறி வாஸ்து துறைக்கு செல்ல அறிவுறுத்தியதன் பேரில் அதுவரை அடிப்படை வாஸ்து மட்டுமே தெரிந்து வந்த நிலையில் P.M.KRISHNARAJAN அவர்களிடம் முறையாக வாஸ்து படித்தார். மேலும் அத்தோடு நில்லாமல் வாஸ்துவுக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று நுணுக்கமாக ஆய்வு செய்தும். வெளிநாட்டில் எப்படி வாஸ்து பார்ப்பது என்று நுணுக்கங்களை கண்டறித்தவர். முகநூல் மற்றும் மாத இதழ்களில் பல வாஸ்து கட்டுறைகளை எழுதியுள்ளார். வாஸ்துவில் உள்ள மூடநம்பிக்கைகளை அகற்றி உண்மையான வாஸ்து எது என்பதை மக்களுக்கு எடுத்துறைத்து வருகிறார்.

