என்னைப் பற்றிய அறிமுகம்:- திருவருள் ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்றறேன்.
ஈரோட்டில் 18 ஆண்டு காலாமாக திருவருள் ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனாராக இருக்கின்றேன். சிறந்த முறையில் ஜாதகமும், திருமணப்பொருத்தமும், ஜாதகம் இல்லாதவர்களுக்கு வெற்றிலைப் பிரச்சனமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். பள்ளி ஆசிரியராக பதினைந்து வருடம் பணியாற்றினேன். 2010 திருச்செங்கோடு ஜோதிட ஆராய்ச்சி மையத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். அதிலிருந்து எனது மேடைப்பேச்சுகள் ஆரம்பமானது இதுவரை 16 ஜோதிட பட்டிமன்றங்கள் கலந்துள்ளேன். 15 வருடமாகவே நிறைய ஜோதிடம் மாநாடுகளிலும், கருத்தருங்களிலும் ஜூம் நிகழ்ச்சிகளிலும் என்னுடைய ஜோதிட பணியை சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இந்த வார சிறப்பு ஆசான் யார் என்று நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மூன்று சேனல் வழியாக இலவச ஜோதிட வகுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றேன்.
Services Offered
• தேசிய ஜோதிடம் மற்றும் ஆன்மீக கூட்டமைப்பு என்ற ஜோதிட மகளிர் அணியின் பொருளாளார் ஆகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன்..
• அதேபோல் ஒரு வருட காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ சரியான ஊட்டச்சத்ததான உணவு மற்றும் யோகா,
• உடற்தகுதி வகுப்பும் இலவசமாக வழங்கி கொண்டு இருக்கின்றேன்.
• இந்த அத்துனை வாய்ப்புகளையும் எனக்கு அளித்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் பல.